மான்டி கார்லோ டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
 Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

மான்டி கார்லோ,

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னர் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com