ரூ.1.25 கோடி நன்கொடை... வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஒலிம்பிக் சாம்பியன்

திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
கின்வென் ஜெங்
Published on

திபெத்,

ஒலிம்பிக் சாம்பியனும் சீன டென்னிஸ் நட்சத்திரமுமான கின்வென் ஜெங், திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.25 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

நிவாரணப் பணிகளை கண்காணிக்கும் ஜெங்

பாதிக்கப்பட்ட மக்கள் இந்த துயரத்தில் இருந்து விரைவில் மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ள கின்வென் ஜெங் நிவாரணப் பணிகளின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சீனாவின் திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டு 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 4,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒலிம்பிக் சாம்பியன்

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கின்வென் ஜெங், தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com