

ரோம்,
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் டென்னிஸ் சர்வதேச போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையரில் மழை காரணமாக தாமதமாக தொடங்கிய அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
மழையால் பாதிக்கப்பட்டு தொடர்ந்த மற்றொரு அரைஇறுதியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் லூசியானோ டார்டெரியை (இத்தாலி) தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜானிக் சினெர்-கேஸ்பர் ரூட் மோதுகின்றனர். இதில் ஜானிக் சினெர் வெற்றி பெற்றால் 1,000 தரவரிசை புள்ளி வழங்கும் 9 மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் வெற்றி பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். ஏற்கனவே செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இந்த சாதனையை படைத்துள்ளார்.