ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வரேவ்!

இந்த தொடரில் நேரடியாக 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வரேவ், நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவின் வூ யீபிங்கை எதிர்கொண்டார்.
ஸ்வரேவ்
Published on: 

ஷாங்காய்,

சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்றில் ஸ்வரேவ் வெற்றி

இந்தத் தொடரில் நேரடியாக 2-வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்வரேவ், நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவின் வூ யீபிங்கை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ் 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற வீரர்களும் முன்னேற்றம்

இதேபோல் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com