ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 3-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
Published on: 

ஷாங்காய்,

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு மற் றும் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரு மான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் 9-ம் நிலை வீரரான அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 3-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால்இறுதியில் தரவரி சையில் 26-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் போகினா, 56-ம் நிலை வீரரான ஆர்துர் ஜியாவுடன் (பிரான்ஸ்) மோதினார். இதில் டேவி டோவிச் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது ஆர்துர் ஜியா காயத்தால் ஒதுங்கினார். இதனால் டேவிடோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டு அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- டேவிடோவிச் மோதுகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com