

நியூயார்க்,
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரு கிராண்ட்ஸ்லாம் வென்றவ ரான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் முன்னேறி அதி காரபூர்வமாக நம்பர் ஒன் அரியணையில் ஏறினார். இதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை அலங்கரிக்கும் 30-வது வீரர். போரிஸ் பெக்கருக்கு பிறகு உச்சத்தை எட்டிய ஜெர்மனி வீரர். கடந்த 52 ஆண்டுகளில் முதல்முறையாக நம்பர் ஒன் இடத்தை அதிக வயது வீரர் போன்ற சிறப்புகளை 29 வயதான அலெக்சாண்டர் பெற்றார். முதலிடத்தை பறிகொடுத்த இத்தாலியின் ஜானிக் சினெர் 2-வது இடத்துக்கு சரிந்தார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 3-வது இடத்திலும், அமெரிக்காவின் பென் ஷெல்டன் 4-வது இடத்திலும், ரஷியாவின் மெட்விடேவ் 5-வது இடத்திலும் உள்ளனர். ஒலிம்பிக் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒரு இடம் உயர்ந்து 11-வது இடம் வகிக்கிறார். ஸ்பெயின் வீரர் 20 வயதான ரபெல் ஜோடர் ஒரு இடம் அதிகரித்து முதல் முறையாக டாப்-10 இடத்திற்குள் (10-வது இடம்) நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையரில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை. கஜகஸ்தானின் எலினா ரைபகினா முதலிடத்திலும், பெலார சின் அரினா சபலென்கா 2-வது இடத்திலும், ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.