அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்...!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகா காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Image Courtesy: @usopen
Image Courtesy: @usopen
Published on

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகா காப், கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோகா காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com