அமெரிக்க ஓபன் டென்னிஸ் : மெத்வதேவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

3வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீரர் மெத்வதேவ் - இத்தாலி வீரர் பிளாவியோ கபலி ஆகியோர் மோதினர்.
Image : AFP 
Image : AFP 
Published on

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீரர் மெத்வதேவ் - இத்தாலி வீரர் பிளாவியோ கபலி ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மெத்வதேவ் 6-3,6-4,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com