அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பிரிசில்லா ஹான்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ஹன்னே வாண்டவிங்கெல் (பெல்ஜியம்) - பிரிசில்லா ஹான் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய பிரிசில்லா ஹான் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹன்னே வாண்டவிங்கெல்லை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com