

நியூயார்க்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் சபலெங்கா 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.