விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பிரிட்டனின் கேமரூன் நோரி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் 6-4, 6-4, 7-6 (17-15) என்ற செட் கணக்கில் கேமரூன் நோரியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com