

லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டனின் ஆர்தர் பெரி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ் 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.