வின்ஸ்டன்-சலேம் ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் தோல்வி கண்ட சுமித் நாகல்

இந்தியாவின் சுமித் நாகல், குரோஷியாவின் போர்னா கோரிக் உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வின்ஸ்டன் சலேம்,

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், குரோஷியாவின் போர்னா கோரிக் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்னா கோரிக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் சுமித் நாகல் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com