ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா பட்டணம் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ஆலத்தூர் ஏா உள்ளது. அந்த ஏரி பகுதியை ஆக்கிரமித்து கோவில், வீடுகள் மற்றும் பால் சொசைட்டிகள் கட்டப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் 9 வீடுகள், 3 பால் சொசைட்டிகள் மற்றும் ஒரு விநாயகர் கோவிலை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்திரவிட்டது. அதன்பேரில் நேற்று தாசில்தார் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி செயற்பொறியாளர் மற்றும் போலீசார் முன்னிலையில் கோவில், பால் சொசைட்டிகள், வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com