கடம்பூர் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் சாவு

கடம்பூர் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் சாவு
கடம்பூர் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் சாவு
Published on

டி.என்.பாளையம்

டி.என்.பாளையத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர் கிராமம் சின்ன உள்ளே பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. மேலும் இவர் பசு மாடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று குத்தியாலத்தூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ராஜேந்திரனின் 2 பசு மாடுகள் மற்றும் ஒரு காளை மாட்டை திடீரென மின்னல் தாக்கியது. இதில் 3 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com