

காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் அருகே உள்ள மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சாருமதி (வயது 22). காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியில் வசித்த இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது சாருமதி கர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில் சாருமதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.இதுகுறித்து தகவலறிந்த காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திற்கு சென்று சாருமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாருமதி என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார். சாருமதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் முசிறி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.