விஜய் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

விஜய் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
விஜய் மக்கள் இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
Published on

கரூர்
கரூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் மதியழகன் நேற்று கரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் மாநில பொறுப்பாளராக இருந்து செயல்பட்டு வந்த ஜெயசீலன், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் இயக்கத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார். தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பெயர்களை பாதிக்கும் வகையிலும், இயக்க நிர்வாகிகள் குறித்து பொய்யான தகவலை அளித்து இயக்கத்தின் பெயருக்கு குந்தகம் விளைவித்துள்ளார். மேலும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொது செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் இயக்கத்திற்கு விரோதமாக செயல்படுவதாக அவதூறாக கூறியுள்ளார். இதனால், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளும், ரசிகர்களும் மன உளைச்சலில் உள்ளனர். எனவே, ஜெயசீலன் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com