வாட்ஸ் அப்பில் ஸ்டேடசில் புது வசதி: பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்டா

ஸ்டேசில் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
வாட்ஸ் அப்பில்  ஸ்டேடசில் புது  வசதி: பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்டா
Published on: 

வாட்ஸ்அப்பில் ஒருவரது ஸ்டேட்டஸ் பதிவுகளைப் பார்க்க முடிவதுபோல, இனி குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்டேட்டஸ் பதிவுகளைப் பகிரும் வசதியும் அறிமுகமாகியுள்ளது.

வாட்ஸ் அப் செயலி

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தங்களது அன்றாட நிகழ்வுகளை ஸ்டேட்டஸ் மூலமாகவும் பகிர்ந்து வருகின்றனர்.இதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகள் மற்றும் அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஸ்டேசில் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இது குறித்த விவரங்கள் வருமாறு:

ஸ்டேடசில் புது வசதி

வாட்ஸ்அப்பில் ஒருவரது ஸ்டேட்டஸ் பதிவுகளைப் பார்க்க முடிவதுபோல, இனி குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்டேட்டஸ் பதிவுகளைப் பகிரும் வசதியும் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் என ஒவ்வொரு குழுவுக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொள்ளலாம். குழு உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அந்தப் பதிவுகளைப் பார்க்க முடியாது. இந்தப் புதிய வசதியுடன் மேலும் மூன்று மாற்றங்களையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

குழுக்களில் பகிரப்படும் முக்கியமான செய்திகளை இனி காலவரையின்றி மேலே பின் (Pin) செய்து வைத்திருக்கலாம். இதனால் நிகழ்ச்சி விவரங்கள், முக்கிய அறி விப்புகள் போன்றவற்றை எளிதாகப் பார்க்க முடியும். புதிதாகக் குழுவில் இணைப வர்களுக்குத் தேவையான முந்தைய உரையாடல்களையும் பகிர்ந்துகொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் குழுவில் ஏற்கனவே நடந்தவற்றை எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும், குழுவில் யாராவது தங்களைக் குறிப்பிட்டிருக்கும் (Mention) செய்திகள் மற்றும் அவற்றுக்கான பதில்களைத் தனியாக வடிகட்டிப் பார்க்கலாம். இதனால் பல செய்திகள் குவிந்திருக்கும் குழுக்களிலும் தங்களுக்குத் தேவையான தகவல்க ளைத் தவறவிடாமல் கவனிக்க முடியும்.

X