சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ளதால் கட்சிகள் தீவிரம்

மார்ச் 30-ந்தேதி முதல் வரும் 6-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய 8 நாட்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 30-ந்தேதி முதல் வரும் 6-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய 8 நாட்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

எனவே மார்ச் 30, ஏப்ரல் 2, 4 மற்றும் 6-ந்தேதி ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அதில் 2 நாட்கள் வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டது. கடந்த மார்ச் 30-ந்தேதியன்று 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்றும் வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடந்தது. அந்தவகையில் இதுவரை தமிழகத்தில் 1,332 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் ஆண்கள் 1,025, பெண்கள் 306, மூன்றாம் பாலினத்தவர் 1 (வில்லி வாக்கம் தொகுதி) ஆகும்.

இனி 4ம் தேதி (நாளை) மற்றும் 6-ந்தேதியன்று (திங்கள் கிழமை) மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். 7-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 9-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு, வேட்பாளரின் இறுதி பெயர் பட்டியல் தயார் செய்யப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ளதால் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com