உங்கள் தொகுதி வேட்பாளர் விவரம் தெரிய வேண்டுமா.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி..?

வேட்பாளர்களின் விபரங்களை ஆன்லைன் வாயிலாக தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உங்கள் தொகுதி வேட்பாளர் விவரம் தெரிய வேண்டுமா.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி..?
Published on

சென்னை,

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ள அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நான்கு மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மொத்தம் 1,955 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் வாக்காளர்கள் ECINET என்று இணைய தளத்தைப் பயன்படுத்தி, தங்களது சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் குற்றப் பின்னணி குறித்த விவரங்களைப் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகில் மிகப்பெரிய தேர்தல் சேவை தளமாக ECINET உள்ளது. இது தேர்தல் கமிஷனின் 40க்கும் அதிகமான மொபைல்போன் செயலிகள் மற்றும் இணையதளங்களை ஒருங்கிணைக்கிறது. வாக்காளர் பதிவு, வாக்காளர் பட்டியல் தேடல், விண்ணப்பங்களை கண்காணித்தல், தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுதல், ஓட்டுச்சாவடி அலுவலர்களுடனான சந்திப்பை முன்பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள் இதன் வாயிலாக வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு தொகுதி வேட்பாளர்களின் குற்றவியல் வழக்குகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், கல்வித் தகுதிகள், வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் குறித்த தகவல்களை, ECINET சேவை தளத்தில் பார்க்கலாம். இதனுள் நுழைந்து உங்கள் வேட்பாளரை தெரிந்து கொள்ளுங்கள் பகுதியை பயன்படுத்தி, விபரங்களை அறியலாம். வேட்பாளர் சமர்ப்பித்த முழுமையான உறுதிமொழி பத்திரங்களையும், பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com