“எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே..” - அண்ணாமலை உருக்கம்

தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.
“எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே..” - அண்ணாமலை உருக்கம்
Published on

கோவை,

கோவை காளப்பட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

விளாத்திகுளம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவத்தில் முதல்-அமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் செயலற்ற காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் கிடைக்காது என்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் வதந்தியை பரப்பி மக்களை வீதியில் நிறுத்தி உள்ளனர்.

அவர்கள் பீதியை கிளப்பியதால் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கேன்கள், பாட்டில்களில் வாங்கி சென்றனர். தமிழகம் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் இப்படிப்பட்ட நிலைமை காணப்படவில்லை.

தி.மு.க ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் நடந்துள்ளன. 2,080 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. த.வெ.க.வினர் நடத்திய கூட்டம் குறித்து நான் கருத்து கூற முடியாது. என்னை பொறுத்தவரை விஜய்யை பற்றி நான் இதுவரை பேசிய கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை.

த.வெ.க. தொடர்பாக பா.ஜ.க. நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருக்கிறது.

Also Read
எழும்பூர் பராமரிப்பு பணி: தென் மாவட்ட ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
“எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே..” - அண்ணாமலை உருக்கம்

தி.மு.க. கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. காங்கிரசுக்கு 3 தொகுதி கூடுதலாக உயர்த்தி கொடுக்கிறபோது எங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீட்டின்போது வைகோ மிகவும் கஷ்டப்பட்டு சிரித்து கொண்டிருக்கிறார். வெறும் 4 தொகுதிகள் வாங்கி உள்ளார். எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டார். வைகோவை இப்படி பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது.

தி.மு.க. கொடுக்கும் 5 தொகுதிகளை திருமாவளவன் நிச்சயம் ஏற்க மாட்டார். தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளது. தி.மு.க. கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பு நிறைய மாற்றம் வரும். பொது எதிரியை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்று சேர்வது தமிழக அரசியலில் நடந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு வரை கடைசி நேரத்தில் கூட திருப்பம் ஏற்பட்டுள்ளது.

என்னை இதுவரை தேர்தலில் போட்டியிட கூறவில்லை. இப்போது நான் களப்பணிகளை செய்து வருகிறேன். கட்சி சொல்வதை செய்வோம். கோவை, திருப்பூரில் போட்டியிட முயற்சிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

Also Read
பராமரிப்பு பணி: திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
“எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே..” - அண்ணாமலை உருக்கம்

கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ. வழக்கு வேண்டும் என கேட்டது யார்? தமிழக வெற்றிக் கழகம்தான் கேட்டது, அவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக நாங்களும் ஆதரவு தெரிவித்தோம். ஜனநாயகன் படம் குறித்து விஜய்யே கருத்து சொல்லாத போது நான் என்ன சொல்ல முடியும்? அந்த படத்தில் நடித்த நடிகர் விஜய்யே இதுவரை ஜனநாயகன் படம் வெளியாகாததற்கு பா.ஜ.க.தான் காரணம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. எனவே விஜய்யிடம் சிபிஐ நடத்தும் விசாரணைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com