

சென்னை,
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட உள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அனல் பறக்க தேர்தல் பிரசாரத்தில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வரும் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் மீண்டும் ஒருமுறை பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்த கடந்த 30 ஆம் தேதி ஏற்கனவே ஒரு முறை பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்திருந்தார்.
இந்த சூழலில் இன்று பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டு இருந்தார். போட்டியிடும் தொகுதி என்பதால் வழக்கமான பிரசாரம், ரோடுஷோ ஆகியவற்றுக்கு பதில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக த.வெ.க. சார்பில் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையும் அனுமதி வழங்கி இருந்தது. இதனால் விஜய் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தயாரானார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் திடீரென்று விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.