வைகுண்ட ஏகாதசி: வருகிற 19-ந்தேதி திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலையில் பாரம்பரியமாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு 4 முறை நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி: வருகிற 19-ந்தேதி திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
Published on

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24-ந்தேதி நள்ளிரவு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 19-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

பாரம்பரியமாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு 4 முறை நடக்கிறது. அதாவது யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையில் நடத்தப்படும். அன்று கோவிலில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com