விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; என்ஜினீயர் கைது

விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்
விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; என்ஜினீயர் கைது
Published on

மும்பை, 

புனேயில் இருந்து நாக்பூர் நோக்கி சம்பவத்தன்று விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் சந்திராப்பூரை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நாக்பூரில் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது அந்த விமானத்தில் பயணித்த புனே கோந்த்வா பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பெரோஸ் சேக்(வயது32) என்பவர் பெண்ணை மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகும் அவர் பெண் பயணிக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை கவனித்த தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் என்ஜினீயர் பெரோஸ் சேக்கை கைது செய்தனர். அவர் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com