ஆசிய பெண்கள் ஆக்கி: சீனாவை வீழ்த்தியது இந்தியா


ஆசிய பெண்கள் ஆக்கி: சீனாவை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 30 Oct 2017 9:04 PM GMT (Updated: 30 Oct 2017 9:04 PM GMT)

8 அணிகள் இடையிலான பெண்களுக்கான ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி நேற்று தனது 2-வது ஆட்டத்தில் சீனாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

ககாமிகாஹரா,

8 அணிகள் இடையிலான பெண்களுக்கான ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி நேற்று தனது 2-வது ஆட்டத்தில் சீனாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. குர்ஜித் கவுர் (19-வது நிமிடம்), நவ்ஜோத் கவுர் (32-வது நிமிடம்) நேஹா கோயல் (49-வது நிமிடம்), ராணி (58-வது நிமிடம்) ஆகியோர் இந்திய அணியில் கோல் அடித்தனர். இந்திய கோல் கீப்பர் சவிதாவுக்கு இது 150-வது ஆட்டமாக அமைந்தது. ஏற்கனவே 10-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி இருந்த இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று மலேசியாவுடன் மோதுகிறது.


Next Story