டெல்லியில் புழுதிப்புயல்: விமான சேவை பாதிப்பு

டெல்லியில் புழுதிப்புயல் வீசியதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் புழுதிப்புயல்: விமான சேவை பாதிப்பு
Published on

டெல்லி,

தலைநகர் டெல்லியில் நேற்று இரவு திடீரென புழுதிப்புயல் வீசியது. பலத்த காற்றுடன் ஒருசில பகுதிகளில் மழையும் பெய்தது.

புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். அதேபோல், விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

டெல்லி வரவேண்டிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. டெல்லியில் இருந்து விமானங்களும் காலதாமதமாக புறப்பட்டன.

அதேவேளை, புழுதிப்புயல் தொடர்ந்து வீசி வரும் நிலையில் மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com