ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அமேசான் இணையதளம் ஸ்தம்பித்தது


ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அமேசான் இணையதளம் ஸ்தம்பித்தது
x
தினத்தந்தி 18 July 2018 7:30 AM GMT (Updated: 18 July 2018 7:30 AM GMT)

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அமேசான் இணையதளம் முடங்கியதால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. #Amazon

ஸ்பெயின்,

ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் பணிபுரியும் அமேசான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ‘அமேசான் பிரைம் டே’யில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

உலகளவில் ஆன்லைன் மூலம் பொருட்களை அமேசான் நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. மேலும் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை அளிப்பதாக ‘அமேசான் பிரைம் டே’ என்பதை உருவாக்கியது. இதில் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. பல அதிரடி ஆஃபர்களை அறிவித்திருந்த அமேசான், பெரிய அளவிலான விற்பனை இந்த 36 மணி நேர சிறப்பு விற்பனையின் போது நடைபெறும் என எதிர்பார்தது.

இந்நிலையில் அமேசானில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் விற்பனை தொடங்கியதும் அதன் இணையதளம் ஸ்தம்பிக்க ஆரம்பித்தது. அதே நேரம், ஸ்பெயினில் உள்ள அமேசான் கிளையில் கிட்டத்தட்ட சுமார் 1800 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஆரோக்கியமான பணியிடம், ஊதிய உயர்வு மற்றும் மருத்து உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் வெர்டி என்ற யூனியன் சார்பில் முன்னின்று நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் இதே போன்று குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் இணையதள முடக்கம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடந்ததால், அமேசான் பிரைம் டே விற்பனை ஸ்தம்பித்தது.

ஆனால் அமேசான் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. அதில், நாங்கள் ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்கவே உழைத்து வருகிறோம். நாங்கள் ஊழியர்களின் பிரச்சனைகளை கேட்க எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறோம். பணியாளர்களில் ஒரு சிலர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள் வேலை செய்து வருவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story