புதுச்சேரி

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

மூலக்குளம் அருகே கஞ்சா வற்ற 4 வாலிபர்கள் கைது.

தினத்தந்தி

மூலக்குளம்

கோரிமேடு போலீசார் மேட்டுப்பாளையம் கனரக வாகன நிறுத்த முனையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் அய்யங்குட்டிப்பாளையம் சுகன்ராஜ் (வயது 26), மூலக்குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (26) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, 445 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் புதுவை அரசு ஆஸ்பத்திரி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக வேலு (25), அய்யப்பன் (58) ஆகியோரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்