சென்னை,
தரமான கட்டுமானம், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வளர்ச்சி ஆகியவற்றிற்காக அறியப்பட்ட, வேகமாக வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் (DAC Developers) புகழ்பெற்ற இசையமைப்பாளரும், சர்வதேச இசைக் கலைஞருமாகிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை தமது விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது. இதுகுறித்து டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் எஸ். சதீஷ் குமார் கூறியதாவது:-
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ், 2014-ல் நிறுவப்பட்டது. இது வாழ்க்கை முறையை மேம்படுத்தும் தரமான வீடுகளை உருவாக்குவதில் 12 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டுள்ளது. நியாயமான விலையில் அத்தியாவசிய ஆடம்பரங்களை வழங்குவதில் கடமைப்பட்டுள்ள டேக் டெவலப்பர்ஸ், அவற்றின் அழகுணர்ச்சி, அத்தியாவசிய வசதிகளுக்கான அணுகல்தன்மை ஆகியவற்றால் அறியப்படுகிறது.
வீடு வாங்குபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு குடியிருப்புத் திட்டமும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு, வசதியையும் நிம்மதியையும் ஒருசேர வழங்குகிறது. வெளிப்படைத்தன்மை, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் உயர்தர கட்டுமானத் தரங்களில் கவனம் செலுத்தி, இந்நிறுவனம் இதுவரை 110-க்கும் மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்கள், 45 லட்சம் சதுர அடிக்கு மேல் கட்டுமானம் மற்றும் 3,000-க்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுடன் நகர்ப்புற வாழ்க்கை அனுபவங்களை மறுவரையறை செய்து வருகிறது.
எங்களது டேக் குடும்பத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானை வரவேற்பதில் உண்மையிலேயே பெருமை கொள்கிறோம். நாங்கள் வெறும் கட்டமைப்புகளை மட்டும் கட்டாமல், வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தும் வகையில் மகிழ்ச்சியான இல்லங்களை உருவாக்குகிறோம். படைப்பாற்றல், துல்லியம் மற்றும் அளவிடற்கரிய திறமைக்காக உலகளவில் கொண்டாடப்படும் அவர், புதுமை, நேர்மை மற்றும் காலத்தால் அழியாத திறமையான கட்டுமானத்திற்காக நாங்கள் கொண்டிருக்கும் விழுமியங்களை உள்ளடக்கியவராகத் திகழ்கிறார். இந்திய மதிப்புகளில் வேரூன்றி, உலகளவில் அங்கீகாரம் பெற்ற அவரது பயணம், நீண்டகால மதிப்புடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கட்டுமானங்களை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது.
டேக் நிறுவனம் ஒரு நவீன, நம்பகமான மற்றும் சர்வதேச மதிப்பு கொண்ட பிராண்டாகத் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள இந்த டேக் டெவலப்பர்ஸ் - ஏ.ஆர். ரகுமான் இணைவு பெரும் உந்து சக்தியாக இருக்கும். மேலும் டேக் நிறுவனத்தின் புதுமை, நேர்மை மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டுமானத் தரங்களுக்கான உறுதிப்பாட்டை இந்த இணைவு வலுப்படுத்தும். அந்தவகையில் மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் சுமார் 1,000 புதிய வீடுகள் கொண்ட ஐந்து குடியிருப்புத் திட்டங்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இக்குடியிருப்புத் திட்டங்கள், போரூர் அருகேயுள்ள காட்டுப்பாக்கம், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்குவார்சத்திரம், போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகேயுள்ள குமணன்சாவடி, ஓ.எம்.ஆர்.-இல் உள்ள சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ளன.
இதன்மூலம் சென்னையில் மீண்டும் ஒரு நம்பகத்தன்மையை மக்களிடம் விதைக்கிறோம். இந்த குடியிருப்பு திட்டங்கள் சகல வசதிகளுடன் பார்த்து பார்த்து கட்டப்பட உள்ளன. இது மக்களுக்கு ஒரு அட்டகாசமான குடியிருப்பு சூழலை உருவாக்குவதுடன், எதிர்கால மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் வழிகோலும் நடவடிக்கையாக அமைகிறது. இந்த புதிய குடியிருப்பு திட்டங்கள் எங்கள் மதிப்பை உயர்த்துவதுடன், தரத்தில் சமரசம் செய்வதில்லை என்ற எங்கள் கொள்கைப்பிடிப்புக்கும் எடுத்துக்காட்டாக அமைகிறது. மக்களின் நல்வாழ்க்கை பேணும் எங்கள் திட்டங்கள் இன்னும் விரிவடையும்.
டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம் வரவிருக்கும் நாட்களில், ஏ.ஆர்.ரகுமானை பிராண்ட் அம்பாசிடராகக் கொண்டு டிஜிட்டல், பிரிண்ட், ஹோர்டிங்ஸ் மற்றும் டி.வி. விளம்பரங்களை வெளியிடவுள்ளது. நம்பகத்தன்மை, சிறந்த வடிவமைப்பு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு வாழும் இல்லங்களைத் தேடும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் டேக் நிறுவனத்தின் நற்பெயரை வலுப்படுத்த இந்த முயற்சி உதவும்'', என்று டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் எஸ். சதீஷ் குமார் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, "நம் கனவுகள் அனைத்தும் உருவாகும் இடம் வீடுதான். தென் இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் ஒரு இனிமையான புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதயத்திலிருந்து இசையை உருவாக்குவதைப் போல, அன்புடன் அழகான வீடுகளை உருவாக்கும் குழுவை நான் டேக் நிறுவனத்தில் காண்கிறேன். ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி பொங்கும் வகையில் வீடுகளைக் கட்டிவரும் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் விழுமியங்களை நான் மதிக்கிறேன்'', என்றார்.