Photo Credit: PTI 
வணிகம்

ஹோண்டா நிறுவன லாபம் 24.5 சதவீதம் சரிவு

ஹோண்டா நிறுவனம் நிசான் மோட்டார் வாகன நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்தது.

தினத்தந்தி

சென்னை,

உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவை மையமாக கொண்டு செயல்படுகிறது. சீனாவில் வாகன விற்பனை சரிவு மற்றும் அமெரிக்காவின் வரி உயர்வு ஆகிய நடவடிக்கையால் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. எனவே இதன் போட்டியாளரான நிசான் மோட்டார் வாகன நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் முதல் காலாண்டில் 24.5 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் இதேநேரம் நிறுவனத்தின் லாபம் சுமார் ரூ.63 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்