சினிமா செய்திகள்

தேசிய விருதுகளை திருப்பித்தரும் எண்ணம் ஏதும் இல்லை நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்

தேசிய விருதுகளை திருப்பித்தரும் எண்ணம் ஏதும் இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தேசிய விருதுகள் பெற்றதை பெருமையாக கருதுவதாக வீடியோ பதிவில் நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

தேசிய விருதுகள் பெற்றதை பெருமையாக கருதுகிறேன். தேசிய விருதுகளை திருப்பித்தருவதாக கூறவில்லை அது என் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை சம்பவத்தில் பிரதமர் மவுனம் காப்பது வருத்தம் அளிக்கிறது. நான் எந்த கட்சியையும் சாராதவன், குடிமகனான என்னை பிரதமரின் மவுனம் காயப்படுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக நிகழ்ச்சியில் தேசிய விருதுக்ளை திருப்பித்தருவதாக பிரகாஷ்ராஜ் பேசியதாக செய்திகள் வெளியானதிற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு

சட்டத்தை மதிக்க முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள்: வாட்ஸ்அப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

பட்ஜெட் 2026-27: சாமானிய மக்களுக்கு என்ன பலன்கள்.. எதெல்லாம் விலை குறையும்?