சினிமா செய்திகள்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி துறை சோதனை

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

நடிகர் விஜய் கடைசியாக நடித்த அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்நிறுவனத்துக்குரிய 20 இடங்களில் காலை முதல் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு கடன் கொடுத்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வசித்து வரும் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு கடலூரில் உள்ள நெய்வேலி என்.எல்.சி. 2வது சுரங்க பகுதியில் நடந்து வந்தது.

இப்படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு சென்ற வருமான வரி துறை அவருக்கு சம்மன் வழங்கியது. நடிகர் விஜய்க்கு சம்மன் வழங்கியது படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை விசாரித்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர். விஜயிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்றனர்.

'பிகில்' பட சம்பள விவகாரம் தெடர்பாக நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று நீலாங்கரையில் உள்ள மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி