சென்னை,
சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை வழக்கில், சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உட்பட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்தனர்.
இவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தபெட்டமைன் கஞ்சா, போதைப்பொருள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுபோதை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் செய்தி சினிமா ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.