எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், நிஷாந்தி. இவர், நடிகை பானுப்ரியாவின் உடன்பிறந்த தங்கை. முதல் படமே வெற்றி அடைந்ததால், அவருக்கு புது பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. அக்காள் பானுப்ரியாவைப்போல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
திடீர் என அவர் நிஷாந்தி என்ற பெயரை மாற்றிக்கொண்டார். சாந்திப்ரியா என்ற சொந்த பெயரில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால், திரையுலகை விட்டு விலகினார். தற்போது அவர், ஓ.டி.டி. மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் ஒரு இணைய தொடரில் நடிப்பதற்காக நிஷாந்தி என்ற சாந்திப்ரியா மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்.