சினிமா செய்திகள்

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடு முழுவதும் கொடிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து அர்ஜூன் இண்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:-

நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நான் நலமாக உள்ளேன். தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

ராம பக்த ஹனுமான் கி, ஜி! என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்