சினிமா செய்திகள்

'ஸ்டார்' படத்தை பாராட்டிய இயக்குநர் நெல்சன்

'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது

தினத்தந்தி

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்து இருக்கிறார்.இந்தநிலையில், 'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் , ஸ்டார் திரைப்படத்திற்கு இயக்குனர் நெல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்சன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஸ்டார் திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளது. இயக்குநர் இளன் சிறப்பாக எழுதியுள்ளார். கவின் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திரையில் பயங்கரமாக மிரட்டியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மிகவும் அற்புதமாக இசையமைத்துள்ளார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?