சினிமா செய்திகள்

டைரக்டர் சாஜித் கான் மீது நடிகை பாலியல் புகார்

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் மீ டூவில் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.

தினத்தந்தி

இந்த நிலையில் ஹவுஸ்புல், ஹவுஸ்புல் 2, தர்னா ஸ்ருதி யெ உள்ளிட்ட இந்தி படங்களை இயக்கியவரும், நடிகருமான சாஜித்கான் மீது பிரபல கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் 2005-ம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டார். நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால் அவருக்கு இந்தி நடிகர்கள் ஆதரவாக பேசி இருப்பார்கள். இந்தி திரையுலக மாபியா வலிமையானது. நான் சாஜித் மீது பழிசுமத்தவில்லை. நடந்த உண்மையை கூறுகிறேன். என் தந்தை இறந்ததும் துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்தார்.

நான் மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார்'' என்று தெரிவித்து உள்ளார். இந்த புகார் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சாஜித்கான் மீது நடிகைகள் ராச்சல், டிம்பிள் பாவ்லா, உதவி இயக்குனர் சலோனி சோப்ரா உள்ளிட்ட பலர் செக்ஸ் புகார் கூறியிருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு