சினிமா செய்திகள்

வைரலாகும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இன்ஸ்டா பதிவு

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ‘எஸ்கே 26’ படத்தில் சிவகார்த்திகேயனின் தோற்றம் சமீபத்தில் வெளியானது.

தினத்தந்தி

சென்னை,

வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை இயக்க உள்ளார். அண்மையில் இயக்குநர் வெங்கர் பிரபு பேசும்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடனான திரைப்படம் நிச்சயம் வித்தியாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும். கதையைக் கேட்ட அவரும் தயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதுவரை பார்க்காத எஸ்கேவை இப்படத்தில் பார்க்கலாம் எனத் தெரிவித்து இருந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பராசக்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட்பிரபு இருவரும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக அமெரிக்காவுக்கு பயணித்திருக்கிறார்கள். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?