சினிமா செய்திகள்

கோடிகளில் சம்பாதித்தாலும் எனக்கும் கடன் பிரச்சினைகள் இருக்கிறது- விஜய் சேதுபதி

வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வதுதான் சவால் என்று விஜய் சேதுபதி பேசினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் கவனம் ஈர்த்துள்ளது. அதில் அவர், இந்த விளையாட்டில் பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது.

தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த கடன் பிரச்சினை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழ கற்றுக்கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வதுதான் சவால்'' என்று விஜய் சேதுபதி பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்