சினிமா செய்திகள்

பிரபல தமிழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி..!!

தமிழ் நடிகை மாளவிகா அவினாஷ் , ஒற்றை தலைவலி இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

நடிகை மாளவிகா அவினாஷ் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கேஜிஎப் படத்திற்கு பிறகு அவரது ரேஞ்ச் மாறியது. பல நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. திரைப்படங்கள் தவிர, பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகப் பணியாற்றி வருகிறார்.

" உங்களில் யாருக்காவது மைக்ரேன்( ஒற்ரை தலைவலி) பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. இல்லையேல் நீங்கள் என்னைப் போல் ஆஸ்பத்திரி படுக்கையில் இருக்க வேண்டியிருக்கும். ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட பாரம்பரிய மருத்துவத்துடன் பனடோல், நெப்ரோசிம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டேன்.

ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை அணுக வேண்டும்" என்று அவர் பரிந்துரைத்தார். தற்போது மாளவிகாவின் பதிவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்