சினிமா செய்திகள்

நாளை நடக்க இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறாது -தனி அலுவலர் சேகர் அறிவிப்பு

நாளை நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி சேகர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்காக தமிழக அரசின் பதிவுத்துறை அதிகாரி சேகர் என்பவர், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் முன்னாள் நிர்வாகிகளால் நாளை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என சிறப்பு அதிகாரி அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு தயாரிப்பாளர் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு