சினிமா செய்திகள்

மன்னிப்பு கேட்ட குஷ்பு

தினத்தந்தி

நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் தன்னை வித்தியாசமான தோற்றங்களில் புகைப்படங்கள் எடுத்து தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தலைமுடியை குட்டையாக்கியது போன்ற ஹேர் ஸ்டைலில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.

அந்த ஹேர் ஸ்டைலை சக நடிகைகள் பலரும் பாராட்டினர். எதற்காக தலைமுடியை குட்டையாக வெட்டினீர்கள்?. புதிய படம் அல்லது தொலைக்காட்சி தொடருக்கான தோற்றமா? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு வெளியிட்ட பதிவில், "நான் தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டதாக நினைத்து நிறைய பேர் எனக்கு குறுந்தகவல்கள் அனுப்பினர். நான் அதை ஒரு போதும் செய்ய மாட்டேன்.

எனது புதிய படத்தின் தோற்றத்துக்காக அப்படி குட்டையான தலைமுடி வைத்து பார்க்கப்பட்டது. தலைமுடியை ஒருபோதும் வெட்ட மாட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி. எனது முந்தையை பதிவு உங்களை தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்