சினிமா செய்திகள்

கமல்ஹாசன் படத்தில் மம்முட்டி, ஷாருக்கான்?

மணிரத்னம் டைரக்டு செய்யும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். மலையாள நடிகர் மம்முட்டி, இந்தி நடிகர் ஷாருக்கான் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தினத்தந்தி

கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியான 'விக்ரம்' படம் வசூல் சாதனை நிகழ்த்தியது.

தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு மணிரத்னம் டைரக்டு செய்யும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் 1987-ல் நாயகன் படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.

36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை அதிக செலவில் தயாரிக்கவும் இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

மலையாள நடிகர் மம்முட்டி, இந்தி நடிகர் ஷாருக்கான் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு, கன்னட திரையுலகில் இருந்தும் பிரபல நடிகர்களை நடிக்க வைக்க உள்ளனர். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ஏப்ரல் 28-ந்தேதி வெளியாக இருக்கிறது. அதன் பிறகு படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு