சினிமா செய்திகள்

ஆர்யா-கவுதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் இணைந்த மஞ்சுவாரியர் - படக்குழு அறிவிப்பு

‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், அடுத்ததாக 'மிஸ்டர் எக்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கின்றனர்.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விபரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு