சினிமா செய்திகள்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு: சவால் விட்ட நடிகை மீரா மிதுன் கைது

கனவில்தான் என்னை கைது செய்ய முடியும் என்று போலீசாருக்கு நடிகை மீராமிதுன் சவால் விடுத்து இருந்தார்.

தினத்தந்தி

நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீராமிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை கைது செய்ய முடியாது என்று மீராமிதுன் போலீசாருக்கு சவால் விட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு