சினிமா செய்திகள்

கத்ரினா கைப்-விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’

‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பை கத்ரினா கைப் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகை கத்ரினா கைப்,  நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கவுள்ளார். அவர் ஏற்கனவே ஏஜெண்ட் வினோத், பத்லாபூர் மற்றும் அந்தாதுன் ஆகிய படஙகளை இயக்கியவர்.

மெர்ரி கிறிஸ்துமஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பை கத்ரினா கைப் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

மெர்ரி கிறிஸ்துமஸ்க்காக இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் படப்பிடிப்பு தளத்தில் இணைந்துள்ளேன்.

நான் எப்போதும் ஸ்ரீராம் சாருடன் சேர்ந்து படம் பண்ண ஆசைப்பட்டிருக்கிறேன். படத்தின் கதையை திரில்லர் உடன் வர்ணிப்பதில் அவர் ஒரு மாஸ்டர். அவர் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பது பெருமை.

ரமேஷ் தவுராணி மற்றும் சஞ்சய் ரவுத்ரே தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அணி சேர்வதில் அதிக ஆர்வத்துடன் உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.

முன்னதாக கத்ரினா கைப்-விக்கி கவுசால் திருமணம், இம்மாதம் முதல் வாரத்தில் ராஜஸ்தானில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.திருமணத்திற்கு பின் கத்ரினா கைப் நடிக்கும் முதல் திரைப்படம் இது. மேலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து கத்ரினா கைப் நடிக்கும் முதல் படமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு