இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி. சீன மொழிகளிலும் வெளியானது. தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மோகன்லால், மீனா நடிக்க தயாராகி ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ராஜ்குமார், பிரியா, சுரேஷ்பாபு ஆகியோர் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். தமிழ் ரீமேக்கை பாபநாசம் 2 என்ற பெயரில் உருவாக்கவும் ஆலோசனை நடக்கிறது.
இந்த நிலையில் திரிஷ்யம் படத்தின் 3-ம் பாகத்தை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி கூறும்போது, திரிஷ்யம் 3-ம் பாகத்தை எடுக்கும் திட்டம் இயக்குனர் ஜீத்து ஜோசப் மனதில் உள்ளது. மூன்றாம் பாகம் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் 3-ம் பாகத்தை எடுப்பது குறித்து பேசி உள்ளனர்'' என்றார்.