சினிமா செய்திகள்

பிரபுதேவா நடித்துள்ள மூன்வாக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மூன்வாக் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

தினத்தந்தி

நடிகர் பிரபு தேவா கதாநாயகனாக நடித்துள்ல திரைப்படம் மூன்வாக். டைரக்டர் என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடத்துள்ளனர். மூன்வாக் என்பது பாப் இசை உலகின் மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் உலகப்புகழ்பெற்ற நடன அசைவாகும். அதன்படி, நடனம் தொடர்பாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மூன்வாக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மூன்வாக் திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்