சினிமா செய்திகள்

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் வெளியிடுகிறார்கள்

4 மொழிகளில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

தினத்தந்தி

சென்னை,

ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. நாளை (7 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

இந்த போஸ்டரை தமிழ்- தெலுங்கில் கமல்ஹாசனும், பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிடுகிறார்கள்.

படத்தின் மோஷன் போஸ்டர் கமல்ஹாசனின் பிறந்த நாளில் வெளியிடப்படுகிறது. தீம் மியூசிக்கும் நாளை வெளியிடப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்