சினிமா செய்திகள்

’பெத்தி படத்தின் மூலம் எனது சிறுவயது கனவு நனவானது’ - ராம் சரண்

'பெத்தி' படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆங்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில், ரகுமான் தனது பாடல்களால் பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். பெத்தி திரைப்படக் குழுவினரான, ராம் சரண், ஜான்வி கபூர் மற்றும் புச்சிபாபு சனா ஆகியோர் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், ராம் சரண் கூறுகையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. பெத்தி படத்தின் மூலம் அந்த கனவு நனவானதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சமீபத்தில் வெளியான சிக்கிரி பாடல் ஹிட்டானது. அதேபோல் பெத்தி திரைப்படமும் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என்றார்.

தற்போது இந்தக் கருத்துகள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், பெத்தி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை இது அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்